பில்லியனர் வரிக்கு எதிராக கொந்தளித்த பிரான்ஸின் மிகப் பெரிய கோடீஸ்வரர்

57 0

பிரான்சின் மிகப் பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், பில்லியனர்கள் மீது முன்மொழியப்பட்ட 2 சதவீத வரியை பிரான்சின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகக் கூறியுள்ளார்.

இது தீவிர இடதுசாரிகள் உருவாக்கிய திட்டம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார். முன்மொழியப்பட்ட பில்லியனர் வரி என்பது பிரான்ஸில் 100 மில்லியன் யூரோக்களுக்கு மேல் ($117 மில்லியன்) சொத்து மதிப்புக் கொண்டவர்களிடம் 2 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.

 

ஆனால், இந்த விவகாரம் பிரான்ஸில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2026 பட்ஜெட்டில் அதைச் சேர்க்க வேண்டும் அல்லது பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அரசாங்கத்தைக் கவிழ்க்கக்கூடிய நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று சோசலிஸ்ட் கட்சியிடமிருந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அர்னால்ட் தெரிவிக்கையில், இது தெளிவாக ஒரு தொழில்நுட்ப அல்லது பொருளாதார விவாதம் அல்ல, மாறாக பிரெஞ்சு பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற தெளிவாக முன்னெடுக்கப்பட்ட திட்டம் என்றார்.

மட்டுமின்றி, இதன் வடிவமைப்பாளரான பொருளாதார நிபுணர் கேப்ரியல் ஜுக்மேனை ஒரு தீவிர இடதுசாரி ஆர்வலர் என்று குற்றம் சாட்டினார்.

பில்லியனர் வரிக்கு எதிராக கொந்தளித்த பிரான்ஸின் மிகப் பெரிய கோடீஸ்வரர் | Arnault Slams Billionaire Tax

 

ஆனால், தாம் எந்த அரசியல் கட்சியிலோ இயக்கத்திலோ இடம்பெற்றதில்லை என ஜுக்மேன் மறுத்துள்ளார். மேலும், களத்தில் தாம் முன்னெடுத்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே தமது கருத்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.