முள்ளிவாய்க்காலில் அரசியல் நடத்தாதீர்கள் ! முள்ளிவாய்க்காலை அரசியலாக்காதீர்கள் !

240 0

முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது.இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தீடிரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள் அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்ப அங்கு குழப்பம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஐயாவைக் குழப்பவேண்டாம் ஐயாவை உரையாற்றவிடுங்கள் என்றார். அதன்போது சிறிதுநேரம் உரையாற்றாது நின்ற எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றமுற்பட்டார். அப்போதும் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தொடர்ந்து பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். இது உரையாற்றும் இடமல்ல, இங்கு அரசியல் பேசாதீர்கள், நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்காதீர்கள், இது முள்ளிவாய்க்கால் முற்றம், என பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.