முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேப்பாபிலவு இராணுவ முகாமிற்குள் விஜயம்செய்துள்ளார்.
கேப்பாபிலவில் நிலமீட்பு போராட்டக் களத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கேப்பாபிலவு மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
காணி விடுவிப்பு தொடர்பாக உறுதியான பதிலை வழங்குமாறு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் இரா.சம்பந்தன் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

