இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு – ஞானசார தேரர்

273 0

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா? என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் வினவியுள்ளார்.

அதற்கு ‘தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..’ எனப் பதிலளிக்க அமைச்சர் முற்பட்டபோது, குறுக்கிட்ட ஞானசார தேரர் மீண்டும் ‘இல்லை இல்லை இந்தநாடு யாருக்குச் சொந்தமானது? எனக் கேள்வியெழுப்பினார். இதன்போது இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என அமைச்சர் கூறமுற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரியாமல் எப்படி நல்லிணக்கத்தைஏற்படுத்து முடியும் எனக் கூறிய சம்பவம் ஒன்று இன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை நல்லிணக்க அமைச்சுக்கு மனோ கணேசன் தகுதியற்றவர் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முற்பகல் இராஜகிரியவில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் காரியாலயத்துக்குள் நுழைந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினேரே இவ்வாறுமுறையற்ற தனமாக நடந்துகொண்டுள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பொதுபல சேனா அமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், இறுதி நேரத்தில்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. என்றாலும் குறித்த நேரத்தில் அமைச்சுக்கு வருகை தந்த தேரர்கள் குழுவினர், அமைச்சரை சந்தித்தே தீருவோம் எனக் கூறிபலவந்தமாக அமைச்சில் இருந்தனர். பின்னர் அங்கு வருகை தந்த அமைச்சருடன் சுமார் 20 நிமிடம் கலந்துரையாடிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.