அம்பாந்தோட்டை சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டின் போது, இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளதோடு, ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டின்போது, சந்தேகநபர்கள் அதிகாரிகள் மீது கைக்குண்டு வீசியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சந்தேகநபர், சமீபத்தில் கொஸ்கொடவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

