வடக்கு முதல்வருக்கும் ஐனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

278 0
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நாளை புதன்கிழமை  கொழும்பில் இடம்பெறவுள்ளது.
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களின் உறவுகளின் போராட்டங்களுக்கு உரிய பதிலை வெளியிடக்கோரியும் வடக்கில் உள்ள ஏனைய முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் தெரிவித்து ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் கடிதம் அனுப்பியருந்தார். இந்த நிலையிலேயே வடமாகாண முதலமைச்சரை நாளைய தினம் சந்திப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்ளுக்கு உரிய தீர்வினை பெறுவது தொடர்பிலும் அம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும்  விசேட விதமாகான கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது
அத்துடன் வடக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரகள் மற்றும் காணி விடுவிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படும் என தெரிய வருகிறது.
மேற்குறித்த சந்திப்பினை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முதலமைச்சார் ஆரம்பித்து வைக்கவுள்ளார்