மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு

248 0

இது­வரை காலமும் இரா­ணுவ கட்­டுப்­பாட்டு விமா­னங்­க­ளுக்கு மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் இம்­மாத இறு­தி­யி­லி­ருந்து தனியார் மற்றும் வர்த்­தக நோக்­கி­லான ஜெட் விமா­னங்கள் தரை­யி­றங்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிவில் விமான அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிம­ல­சிறி தெரி­வித்தார்.

சிவில் விமான அதி­கார சபை­யினால் மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்­துக்கு இதற்­கான அங்­கீ­காரம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

தற்­போது வரை இலங்கை விமானப் படையின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­தின்­படி 2016ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி வெளியி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் இம்­மாதம் 31ஆம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் சிவில் விமான அதி­கார சபைக்கு கைய­ளிக்­கப்­பட வேண்டும்.

இந்த அங்­கீ­காரம் வழங்­கப்­பட்ட இல ங்கை விமான நிலைய விமான சேவை நிறு­வனம் மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தின் பரா­ம­ரிப்பை பொறுப்­பேற்­க­வுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் ஜெட் மற்றும் 50 ஆச­னங்­களைக் கொண்ட விமா­னங்­களை உள்­வாங்கும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தின் ஓடு­பாதை 1200 மீற்றர் நீள­மா­னது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தைப் புன­ர­மைப்­ப­தற்கு நிதி ஒதுக்­கி­யி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டையில் 317 கோடி ரூபாய் செலவில் புன­ர­மைக்­கப்­பட்ட மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வருடம் ஜூலை மாதம் 10ஆம் திகதி ஆரம்­பித்து வைத்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து சேவை யை மேம்­ப­டுத்தும் வித­மாக இரண்டு விமான சேவைகள் மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மற்றும் கொழும்­புக்கு இடையில் தினமும் நடை­பெ­ற­வுள்­ள­தாக அப்­போது தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கிழக்கு மாகா­ணத்தில் உல்­லாசப் பய­ணத்­து­றையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு உள்ளூர் விமானப் போக்­கு­வ­ரத்து இன்றியமையாதது என தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தி வந்தத ற்கு அமைவாக இந்த விமானப் போக்கு வரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக் கப்படுவதாக முதலமைச்சர் செய்னுலா ப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.