ரஜினி காந்த் தமிழக அரசியலில் பிரவேசிப்பாரா?

491 0

தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியல் பிரவேசிப்பது குறித்து தமிழகத்தில் தற்போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன.

ஆன்மிகத்தை முழுமையாக நம்பும் தான், ஆண்டவன் தீர்மானித்தபடியே செயற்படுவதாகவும், ஒருவேளை அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தை சினிமாத்துறையினர் ஆண்டது போதும். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல் பிரவேசம் குறித்து ரஜனிகாந்த் தமது உத்தியோகபூர்வ அறிப்பை இதுவரை வெளியிடாதுள்ள நிலையில், அவரை தம்பக்கம் ஈர்க்க பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் இப்போதே ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.