தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த வவுனியா மாணவி

460 0

vauneja-4வவுனியா/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் =11 இல் கல்விகற்கும் மாணவி செல்வி . சங்கவி கனகரட்ணம் 2016.07.09 அன்று கல்வி அமைச்சு , இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி பிரிவு (4) இல் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் . அத்துடன் வட மாகாணமட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழித்தின உறுப்பெழுத்து (print script writing ) போட்டியில் தரம் =11 இல் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் சிங்கள மொழித்தின போட்டியிலும் தேசியமட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்கது . இவர் பாடசாலைக்கும் , வவுனியா மாவட்டத்துக்கும் பெருமையீட்டித் தந்துள்ளமையால் பாடசாலைஅதிபர் திருமதி.க. பாக்கியநாதன் அவர்களும் பாடசாலைச் சமூகமும் , வலயக்கல்விபணிப்பாளர்திருமதி. S.அன்ரன் சோமராஜா அவர்களும் பாராட்டுக்களையும் , நன்றியையும் தெரிவித்துள்ளனர் .

இவர் திரு. ந. கணகரட்ணம் ( ஆசிரியர்) , திருமதி , க. யசோதா ( ஆசிரியர்) ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது .