மத்திய மாகாணத்தில் கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லியோபோகான் ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹக்க பட்டாஸ் வெடித்து சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்களம் சடலத்தை கொண்டு சென்றுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லியோபோகான் ஸ்ரீலங்கா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

