அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடாவில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 6.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
பூகம்பத்தின் ஆழம் 10 கிலோ மீற்றர் மற்றும் சரியான இடம் அட்சரேகை 6.82 N, தீர்க்கரேகை 93.37 E ஆகும் என இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த விதமான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வௌஜயாக இல்லை.
22 ஆம் திகதி டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் சிறிய அளவிலான அதிர்வு உணரப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

