அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது

65 0

மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர தெற்கு பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஹோகந்தர தெற்கு பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 265 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்கத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலம்பே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.