ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர்.மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினரும் யூதகுடியேற்றவாசிகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களை விபரிக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஹெப்ரோனிற்கு அருகில் உள்ள உம் அல் கெய்ர் பாலஸ்தீனிய கிராமத்தின் மீது யூதகுடியேற்றவாசிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன அதிகார சபையின் கல்வியமைச்சு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
நோ அதர் லாண்டினை உருவாக்கிய வேறு இருவரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
இன்றுகாலை எனது நண்பர் அவ்டா படுகொலை செய்ய்பட்டார் என பாலஸ்தீன பத்திரிகையாளர் பசெல் அட்ரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலியர்
அவர் தனது கிராமத்தில் நின்றுகொண்டிருந்தவேளை யூதகுடியேற்றவாசியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அது அவரது உயிரை குடித்தது என அவர் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது – ஒவ்வொருவராக என அவர் பதிவிட்டுள்ளார்.ஹடாலின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வீடியோவையும் பதிவிட்டுள்ள அவர்

