நியூயோர்க் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரப்பு

58 0

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் மத்திய மன்ஹாட்டனில் திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள்.

44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தப் பகுதியில் பல ஐந்து நட்சத்திர வணிக ஹோட்டல்கள், கோல்கேட்-பால்மோலிவ் மற்றும் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி உள்ளிட்ட பல நிறுவன தலைமையகங்கள் உள்ளன.

லாஸ் வேகாஸைச்  சேர்ந்த 27 வயதான நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வணிக வளாகத்திற்கு  நுழைந்து வலதுபுறம் திரும்பி, அதிரடியாக  பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

பின்னர் அந்த நபர் தரை தளத்தில் பெண்ணொருவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட இரண்டு பேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் 33 வது மாடிக்குச் சென்று, அங்கு நபரொருவரை சுட்டுக் கொன்றுள்ளார். மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.