நாடு கடத்தப்பட்ட வெலிகம சஹான் விமான நிலையத்தில் கைது!

59 0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலும் எனப்படும் வெலிகம சஹான், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டநிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரைால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திங்கட்கிழமை (28) சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடுகடத்தப்பட்ட போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதான சந்தேக நபர், மாத்தறை மற்றும் பாணந்துறை பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார்  தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஹரக்கட்டா எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் உதவியாளர் எனவும் மிதிகம சூட்டி மற்றும் குடு சாலிந்து ஆகியோருக்கு  முக்கிய துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் எனவும்  தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சந்தேக நபர்  செய்த குற்றங்களின் பட்டியலை  பொலிஸார்  வெளியிட்டுள்ளனர்  –

2025.04.29 அன்று, ஹிரணை பொலிஸ் பிரிவில் ரி-56 துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2025.06.05 அன்று, மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் ரி-56 துப்பாக்கி மற்றும் 9mm ரக துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2025.06.29 அன்று, பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகக் கடையில், T-56 துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2024.04.15 அன்று, கொடவில பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

22.04.2024 அன்று, மாலிம்பட பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதாக கூறி 80,000 ரூபா திருட்டில் ஈடுபட்டுள்ளவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

23.07.2024 அன்று, வெலிகம பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்ற ஒரு பெண்ணிடமிருந்து 52,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ் கொள்ளை.

24.07.2024 அன்று, மாலிம்பட பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு பெண்ணிடமிருந்து 150,000 ரூபா மதிப்புள்ள தங்கமாலை கொள்ளை.

24.08.2024 அன்று, திஹகொட பொலிஸ் பிரிவில் வீதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 450,000 ரூபா  மதிப்புள்ள தங்க மாலை, 35,000 ரூபா மதிப்புள்ள ஒரு நெக்லஸ் மற்றும் 450,000 ரூபா  மதிப்புடைய ஒரு வளையல் கொள்ளை.

5.08.2024 அன்று, கொடவில பொலிஸ் பிரிவில்  பெண்ணொருவரிடமிருந்து   தங்கமாலை திருட்டு.

8.08.2024 அன்று, வெலிகம பொலிஸ் பிரிவில் ஒரு நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பலத்த காயங்கள் ஏற்பட காரணம்.

11.08.2024 அன்று, மாலிம்பட பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடமிருந்து 95,000 ரூபா மதிப்புள்ள தங்கமாலை மற்றும் ஒரு தங்க நெகலஸ்  கொள்ளை.

12.08.2024 அன்று, வெலிகம பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 90,000 ரூபா மதிப்புள்ள தங்கமாலை கொள்ளை.

12.08.2024 அன்று, கொடவில பொலிஸ் பிரிவில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடமிருந்து ஒரு தங்க நெக்லஸ் கொள்ளை.