வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17 பேர் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மகஜர் அளிக்க முற்பட்டுள்ளனர்.
முன்னதாக, முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.ரஞ்சித்திற்கே மீளவும் அப் பதவியை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, குறித்த மனுவை ஆளுநர் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
உயர்பீடத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாகவே தான் இதனை பொறுப்பேற்கவில்லை என, வட மத்திய மாகாண ஆளுனர் பி.பி.திசாநாயக்க, தெரியப்படுத்தியுள்ளதாக, அம் மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

