கொஸ்கொட இரட்டைக் கொலை: தேடப்பட்ட நபர் கைது

551 0

கொஸ்கொட – பொரளுகெடிய பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் பொலிஸில் சரணடைந்ததை அடுத்தே கைதாகியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவர் கடுவில – அகுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவராகும். சந்தேகநபரை இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொஸ்கொட – பொரளுகெடிய பகுதியில் பெண் ஒருவர் மற்றும் ஆறு மாத குழந்தையொன்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.