இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

61 0

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் மோசடி மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான உயர்வு காணப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.