இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான அதிகாரப்பூர்வ கடன் குழுவுடன் ஜூன் 26, 2024 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு குறித்த இருதரப்பு ஒப்பந்தம் ஜூன் 16, 2025 அன்று கையெழுத்தானது.
இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுமும், பிரெஞ்சு அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகலான Agence Franciaise de Developpement (AFD), Bpifrance Assurance Export மற்றும் Banque de France ஆகியவை செயல்படுத்தல் கடிதங்களை நிறைவு செய்யும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, Agence Franciaise de Developpement (AFD) நிறுவனத்துடனான அமலாக்கக் கடிதத்தில் கையெழுத்திடும் நிகழ்வு வியாழக்கிழமை (24) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சத்தில் நடைபெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷனா சூரியப் பெரும, பிரான்ஸ் அரசாங்கத்தின் சார்பாக Agence Franciaise de Developpement (AFD) யின் இலங்கைக்கான இயக்குநர் Yasid Bensid இந்த அமலாக்கக் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
அதைத் தொடர்ந்து, Bpifrance Assurance Export மற்றும் Banque de France நிறுவனத்துடனான அமலாக்கக் கடிதங்களும் கையெழுத்திடப்பட்டன.
மேற்கூறிய அமலாக்கக் கடிதங்களில் கையெழுத்திடுவது, இலங்கை அரசாங்கத்திற்கும் பிரெஞ்சு குடியரசுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முடிவைக் குறிக்கிறது.
இதன் விளைவாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கவும், மற்றும் கடன் வலங்கும் பிரெஞ்சு அரசாங்கத்தின் அனைத்து கடன் நிறுவனங்கள் மூலம் புதிய திட்டங்களுக்கு நிதியுதவி பெறும் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

