பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு பிணை!

65 0

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனை பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (24) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜகத் விதானவின் மகன் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜகத் விதானவின் மகனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜகத் விதானவின் மகன், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பொருத்திய வாகனம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை (19) களுத்துறை மத்துகம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.