புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி என்பவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (24) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பொருத்திய வாகனம் ஒன்றை சட்டவிரோதமாக பதிவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி என்பவர் இன்றைய தினம் காலை மத்துகம நீதவான் நீதிமன்றில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

