தெஹிவளை பிரதேசத்தில் உள்ள எஸ்.டி.எஸ் ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சுகாதார நிர்வாக அதிகாரி ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகரசபையின் சுகாதார நிர்வாக அதிகாரி ஒருவரை இலக்க வைத்தே இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெஹிவளை பிரதேசத்திலி உள்ள எஸ்.டி.எஸ் ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சுகாதார நிர்வாக அதிகாரி ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது துப்பாக்கி செயலிழந்துள்ளதால் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சுகாதார நிர்வாக அதிகாரி தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

