நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மருந்து தட்டுப்பாடு: நோயாளர்கள் பெரும் சிரமத்தில்!

74 0

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் பிரதான அரச வைத்தியசாலைகளில் முக்கிய நோய்களுக்கான மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

புற்றுநோய், தொற்றுநோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கு தேவையான மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் அரச வைத்தியசாலைகளில் குறைவாக உள்ளதால், நோயாளர்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். பலர் தனியார் மருந்தகங்களில் அதிக விலையில் மருந்துகளை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனால், வருமானம் குறைந்த குடும்பங்கள் குறிப்பாக பெருந்தோட்டம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருந்து பெறுவதில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டு, அயலவர்கள் மற்றும் பரோபகாரிகளிடம் உதவிக்காக நாட வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக சங்கங்கள் அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோயாளர்கள் சிலர் மருந்து வாங்குவதையும் தவிர்க்கின்றனர் என்பதும் கவலைக்குரியது.

அதிகாரிகள் மற்றும் உடல் நலத்துறை தொடர்புடையவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.