சொகுசு மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞன் கைது!

73 0

குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹம்மாலிய பிரதேசத்தில் சொகுசு மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞன் ஒருவன் குருணாகல் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹம்மாலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பொருத்தப்பட்ட 3 சொகுசு மோட்டார் சைக்கிள்களும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஒரு சொகுசு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.