விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 458 பேர் கைது!

77 0

நாடளாவிய ரீதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 166.822 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 728.25 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 583.71 கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.