கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைதத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்ற கோரி உரிமையாளர்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் உறுதி காணி உள்ளவர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் தமது வாழ்வாதாரங்களை இழப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிடம் முறையிட்டனர்.
எனவே இது தொடர்பாக கிண்ணியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் கொண்டு வந்த பிரேரணையின் பிறகு சனிக்கிழமை (19) கரையோர பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு எடுக்க பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தரப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.
இதன்போது கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம். மஹ்தி, கிண்ணியா நகர சபை செயலாளர் அனீஸ், நகர சபை உறுப்பினர் ரசாத், முன்னாள் நகர சபை உறுப்பினர் கலிபதுல்லாஹ், கிண்ணியா மீனவ சங்க தலைவர் பாயிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

