வவுனியா வடக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்துப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் வவுனியா வடக்கில் அதிகரித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் நில ஆக்கிரமிப்புச்செயற்பாடுகளை எவ்வாறு எதிர்கொண்டு தடுத்து நிறுத்துவதென்பதுதொடர்பில் ஆராயப்பட்டதுடன், வவுனியாவடக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள்தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியாவடக்கு பிரதேசசபையின் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பிரதேசசபை உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன், வவுனியாவடக்கு பாரதேச இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




