புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சப்பிரகமுவ மாகாண குற்றப்புலனாய்வு பிரிவு திறப்பு விழாவில் சனிக்கிழமை (19) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கடமையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 – 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 30 சதவீதமானோர் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மீதமாக உள்ள 30 சதவீதமானோர் மாத்திரமே நல்ல தேகாரோக்கியத்துடன் உள்ளனர்.
ஒரு சில அதிகாரிகள் குடும்பப் பிரச்சினை, தொழில் பிரச்சினைகளால் தொற்றா நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆகையால் எதிர்வரும் நாட்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பணிகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை மேலும் திறம்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு உயரிய கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சேவை சலுகைகளும் விரைவில் அதிகரிக்கப்படும்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதியளவானதாக இல்லை. குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர். ஆகையால் அவர்களின் சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியும் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இதனால் எதிர்வரும் வருடம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சம்பள திட்டத்தை தயாரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

