கொட்டாவை பொலிஸ் பிரிவில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கேரள கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து, 03 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளும் மற்றைய சந்தேகநபரிடமிருந்து 04 கிலோ 10 கிராம் கேரள கஞ்சாவை போதைப்பொருளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

