5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Essen நகரை வந்தடைந்தது.

412 0

சிங்கள பேரினவாத அரசால் 70 ஆண்டுகளாக இனவழிப்பு செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை கோரி யேர்மனியில் 5 நாளாக நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் München நகரில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நகரங்களை கடந்து இன்று மாலை 4 மணிக்கு Essen நகரை வந்தடைந்தது. வேற்றின மக்கள் நடமாடும் வழிப்பாதையில் கண்காட்சி அமைத்து , துண்டுப்பிரசுரங்கள் ஊடாக தமிழின அழிப்பை எடுத்துரைத்தனர். பல்லின மக்கள் பலர் கரிசனையோடு வைக்கப்பட்ட பதாதைகளை அவதானித்தது குறிப்பிடத்தக்கது.

கவனயீர்ப்பு நிகழ்வில் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேய பணியாளர்களும் , Essen நகர மக்களும் இணைந்து மாவீரர் தூபிக்கு சென்று அங்கு தமிழீழ மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும், சிங்கள பேரினவாத அரசால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவுகூரி வணங்கினார்கள். நாளைய தினம் காலை விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Dortmund நகரத்துக்கு சென்று மாலை Münster நகரை செல்லவுள்ளது.