சிறீலங்காவில் மே மாதத்தில் ஏற்றுமதிகள் 12 வீதத்தால் குறைந்துள்ளது

372 0

656103716-sri-lanka-cricket-logo_6சிறீலங்காவின் கடந்த மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருட மே மாதத்தில் ஏற்றுமதிகள் 12 வீதத்தால் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறக்குமதியின் வீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு 1590 மில்லியன் டொலர் இறக்குமதிகள் இடம்பெற்றுள்ளன. இது 0.3 வீத அதிகரிப்பாகும்.அத்துடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வர்த்தகப் பற்றாக்குறை 15.7ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும், இறக்குமதிகள் 2.8 வீதத்தினால் (7,645 மில்லியன் டொலர்) குறைவடைந்துள்ளதாகவும், ஏற்றுமதிகள் 6 வீதத்தினால் (4,211 மில்லியன் டொலர்) குறைந்திருப்பதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.