இரவு 7 மணி வரை நீடித்த யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு

72 0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு, மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவின் தலைமையில் புதன்கிழமை (16) மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை நீடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கான முக்கிய காரணமாக, துணை முதல்வரின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சபை அமர்வின் போது, உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்விகள் எழுப்பிய தருணங்களில், துணை முதல்வர் தொடர்ந்து தலையீடு செய்ததாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

ஒவ்வொரு விவாதத்திலும் அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு தனக்கென கருத்துகளை தெரிவித்தார். இதனால் சபை அமர்வின் நேரம் பெரிதும் நீடித்தது. இது தேவையற்ற காலநீடிப்பு எனவும், சபையின் ஒழுங்கமைப்பை பாதிக்கும் செயற்பாடாகவும் உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.