ஹோமாகமவில் ஆணின் சடலம் மீட்பு!

86 0

ஹோமாகம – பனாகொட, சுஹந்த மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்று வியாழக்கிழமை (17) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஹோமாகம  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா இல்லையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.