மலையகத்திற்கான 10,000 வீடுகள் தமுகூவுக்கு கிடைத்த வெற்றியே

331 0

தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சி அரசாங்கம் உருவாவதற்கும் அமைவதற்கும் பெரும் காரணமாக இருந்துள்ளது, அதனால் அரசாங்கத்துடன் பேரம் பேசி மலையக மக்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மலையகத்தில் தற்போது கல்வி உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் போன்றன அபிவிருத்தி அடைந்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் மலையகத்திற்கான இந்திய பிரதமரின் விஜயம் மலையக மக்களை உலகிற்கு தெரிந்துக் கொள்ள பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவரின் வருகையின் பின்னர் மலையத்தில் 10.000 வீடுகள் அமையவிருப்பதும் கல்வி துறையில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட இருப்பதும். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த ஒரு பாரிய வெற்றியாக கருதுகின்றேன்.

இதற்கு காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக 06 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவர்களில் 02 அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் காணப்படுவதாகும்.

எந்த ஒரு அரசாங்கமும் அதன் ஆட்சி அமைப்பதற்கு காரணமான பங்காளர் கட்சிகளுடனே செயற்படும். அதேபோல் வெளிநாட்டு உதவிகள், உட்பட இராஜதந்திரிகளிலூடான செயற்பாடுகளும் அவர்களுடனே மேற்கொள்ளும்.

அந்த வகையில் இந்திய பிரமரிடம் ஏற்கனவே நாங்கள் 25,000 வீடுகள் கேட்டதற்கு இணங்க முதற் கட்டமாக 10.000 வீடுகள் கிடைக்க பெற்றமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதுகின்றேன், என்றார்.