மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளின் தாக்குதலில் பாலஸ்தீனிய அமெரிக்கர் ஒருவர் பலி

66 0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள உறவினர்களை பார்க்க சென்ற பாலஸ்தீனிய அமெரிக்கர் ஒருவரை யூகுடியேற்றவாசிகள் கொலை செய்துள்ளனர்.

20 வயது சாய்பொல்ல முசாலெட் என்ற இளைஞரே யூத குடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

ரமனுல்லாவிற்கு அருகில் உள்ள தனது குடும்பத்தினை பண்ணைக்கு இந்த இளைஞர் சென்றவேளை யூதகுடியேற்றவாசிகள் இவரை மிக மோசமாக தாக்கினார்கள் அதன் பின்னர் மூன்று மணித்தியாலத்திற்கு மேல் அந்த பகுதிக்கு அம்புலன்ஸ்கள் செல்வதை தடுத்துவைத்திருந்தனர் என  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  முசாலெட் அங்கு உயிரிழந்துள்ளார்.

நான் முதலில் அங்கு சென்றேன் அவர் அசையமுடியாமல் மூச்சு விடமுடியாத நிலையில் காணப்பட்டார் என கொல்லப்பட்டவரின் 22 வயது நண்பர் தெரிவித்துள்ளார்.

இதன் போது யூதகுடியேற்றவாசிகளால் சுடப்பட்ட 22 வயது பாலஸ்தீனிய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த கொலை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சாய்பொல்ல முசாலெட்டின் குடும்பத்தினர் இந்த கொலைக்கு காரணமான இஸ்ரேலிய குடியேற்றவாசிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.