பிரான்ஸ் நெஸ்லே தலைமையகத்தில் சோதனை: மோசடி தொடர்பில் விசாரணை

63 0

 பிரான்சிலுள்ள நெஸ்லே நிறுவன தலைமையகத்தில் சோதனை ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மினரல் வாட்டர் தயாரிப்புகளை சட்டவிரோதமாக கையாள்வது தொடர்பாக மோசடி நடந்ததாக எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

 

குறிப்பாக, பிரான்சின் Issy-les-Moulineauxஇல் அமைந்துள்ள நெஸ்லே நிறுவன தலைமையகத்தில் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி இந்த சோதனை நடத்தப்பட்டது.

Foodwatch என்னும் அமைப்பு அளித்த புகாரின் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

புகார்களை தாங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள நெஸ்லே நிறுவனம், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.