யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணை குழு வடக்கு முதல்வரால் நியமிப்பு

247 0
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் தலமையில்   இடம்பெற்றது. இதன்போதே மேற்படி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதாவது யாழ்ப்பாணம் மாநகர சபைநால் கட்டப்பட்ட குறித்த கட்டிடம் கட்டியது முதல் வாடகைக்கு வழங்கியது முதல் உரிய நடமுறைகள் பின் பற்றப்படவில்லை என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவற்றினை ஆராய்ந்த முதலமைச்சர் ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தார் இது தொடர்பில் ஆராய்ந்து இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவில் வட மாகாண சபையின் லேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் , வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகிய மாகாண சபை உறுப்பினர்களும் மூன்று அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.
குறித்த சந்திப்பில் வட மாகாண சபையின் யாழ். மாவட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் , உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.