உக்ரைனில் மூத்த சுவிஸ் அரசியல்வாதிக்கு மரண பயத்தைக் காட்டிய ரஷ்யா

95 0

மூத்த சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் உக்ரைன் சென்றுள்ள நிலையில், அவருக்கு மரண பயத்தைக் காட்டியுள்ளது ரஷ்யா.

சுவிஸ் நாடாளுமன்ற தலைவரான Maja Riniker உக்ரைனுக்கு சென்றுள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

 

வியாழக்கிழமை இரவு ரஷ்யா நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள், 22 பேர் காயமடைந்தார்கள்.

ரஷ்ய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, தான் சுமார் இரண்டு மணி நேரம் பங்கர் ஒன்றிற்குள் செலவிட நேர்ந்ததாக Riniker தெரிவித்துள்ளார்.

Riniker உக்ரைனிலுள்ள Vinnytsia நகரில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.