OpenAIஇன் அடுத்த அதிரடி திட்டம்: ஆபத்தில் கூகுளின் வருமானம்

76 0

விரைவில் தனது சொந்த வலை உலாவியை(Web browser) அறிமுகப்படுத்த ‘OpenAI’ திட்டமிட்டுள்ளது.

இந்த உலாவி AIஆல் இயக்கப்படும் என்பதோடு Google Chromeஉடன் நேரடியாக போட்டியிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ChatGPT போன்ற கேள்விக்கு பதிலளிக்கும் சாளரம் போன்ற கூடுதல் ஊடாடும் அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் மக்கள் இணையத்தைப் பயன்படுத்தும் முறையை மாற்றுவதே இதன் குறிக்கோள் ஆகும்.

ChatGPT ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் 500 மில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பதால் புதிய உலாவி விரைவாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூகுளின் வருமானம்

குறித்த பயனர்கள், OpenAIஇன் உலாவிக்கு மாறினால், அது கூகுளின் வணிகத்தைப் பாதிக்கலாம்.

 

 

ஏனெனில் இந்த பயனர்கள் பார்க்கும் விளம்பரங்களில் கூகுளின் பெரும்பகுதி வருமானம் தங்கியுள்ளது.

அத்துடன், பயனுள்ள தரவை சேகரிக்கவும் இந்த உலாவியைப் பயன்படுத்த OpenAI விரும்புகின்றது.

OpenAIஇன் அடுத்த அதிரடி திட்டம்: ஆபத்தில் கூகுளின் வருமானம் | Open Ai Next Introduction Google S Revenue At Risk

 

OpenAI சமீபத்தில் AI திட்டங்களுக்கு பணம் செலவழித்ததோடு ரொபோட்டிக்ஸ் மற்றும் பெரிய தரவு மையங்களில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.