பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இரண்டுபேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
பாராசூட் மூலம் குதித்த இருவர் கைது
நேற்று வியாழக்கிழமையன்று, ஈபிள் கோபுரத்தில் 330 மீற்றர் உயரத்திலிருந்து இரண்டு பேர் பாராசூட்டுடன் குதிக்கத் தயாரானதை பாதுகாவலர்கள் கவனித்துள்ளார்கள். உடனடியாக அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசார் அவர்கள் இரண்டுபேரையும் தொடர்புகொள்ள முயன்றும் அவர்கள் குதித்துள்ளார்கள்.

