மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக நபர் கைது!

64 0

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய  பொலிஸ்  பிரிவின் புத்பிட்டிய பகுதியில்  பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நெதுன்கமுவ , உருவெல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 67 லீற்றர் 500 மில்லி லீற்றர்  சட்டவிரோத மதுபானம் , 360 லீற்றர் கோடா மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்ற்ப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.