சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளில் நாளை முதல் விசாரணை

359 0

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, நாளை முதல் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளின் விசாரணையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வாட்ஸ் அப்’ என்னும் தகவல், புகைப்பட பரிமாற்ற செயலியை பயன்படுத்துவோரின் தொலைபேசி எண் உள்ளிட்ட அந்தரங்க தகவல்கள், ‘வாட்ஸ் அப்’பின் மூல நிறுவனமான ‘பேஸ்புக்’ குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், இதில் விருப்பம் இல்லாதவர்கள் வாட்ஸ் அப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.‘வாட்ஸ் அப்’பின் இந்த அறிவிப்பு, பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கான மக்களின் அந்தரங்க தகவல்களை வணிக நோக்கத்துக்காக ‘பேஸ்புக்’கில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் முதலில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசன அமர்வு, நாளை (திங்கட்கிழமை) முதல் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளின் விசாரணையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.