பாகிஸ்தான் சீனாவுக்கு இடையில் 500 மில்லியன் பொறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து

236 0

ஒரே பாதை ஒரே இலக்கு என்ற தொனிப்பொருளில் சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறும் மாநாட்டிற்கு முன்னதாக, பாகிஸ்தான் சீனாவுடன் 500 மில்லியன் பொருமதியான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஊடாக அரேபிய கடவுக்கு நுழையும் சீன – பாகிஸ்தான் பொருளாதார மேடைக்கு 57 பில்லியன் டொலரை முதலீடு செய்ய சீனா தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சீனா ஜனாதிபதி ஷீ ஜின்பின்னிற்கு இடையில் கைச்சாத்தானது.

இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் பீஜிங் நகரில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இஸ்லாமாபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.