பிள்ளையானிற்கு உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது

78 0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோதே அவருக்கு இது குறித்து தெரிந்திருந்தது என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன  என அவர் தெரிவித்துள்ளார்.