அனுமதியின்றி கைவிலங்குகளை வைத்திருத்தல், பயன்படுத்துதல் சட்டவிரோதமானதாகும்

68 0

அனுமதியின்றி கைவிலங்குகளை வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் சட்டவிரோதமான செயல்களாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாத்திரமே கைவிலங்குகளை வைத்திருக்கவும் பயன்படுத்தவும் அனுமதி உண்டு.

பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் இன்றி கைவிலங்குகளை தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கஹவத்தை – அந்தான பகுதிக்கு சென்ற குற்றக் கும்பல் ஒன்று தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறி, இளைஞர்கள் இருவரை கைவிலங்கிட்டு கடத்திச் சென்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இவ்வாறு கொலை செய்வதற்காக கைவிலங்குகளை பயன்படுத்துவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.