மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல்

335 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு முன்னால் கூடாரம் ஒன்று அமைக்க முற்பட்ட நிலையில், ராகம மருத்துவ பீட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இவ்வாறு கூடாரம் அமைப்பதற்கு ராகம தொடருந்து நிலைய அதிபர் அனுமதி அளிக்காத நிலையில் இவ்வாறு கூடாரம் அமைக்க மாணவர்கள் முற்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த நிலையிலேயே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து தொடரூந்து நிலைய அதிபரை சம்பவ இடத்திற்கு அழைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதற்கு இடையில் மாணவர்கள் கூடாரத்தை அமைத்தனர்.

இந்தநிலையில் நிலைய அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்ததும் மாணவர்கள் அங்கிருந்து கலைந்துக் சென்றனர்.