விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற Frankfurt தமிழ் மக்கள் – 4 நாள்

310 0

4 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4 மணிக்கு Frankfurt நகர மத்தியில் அங்கு வாழும் தமிழ் இளையோர்களின் ஆதரவுடன் , தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களின் ஒருங்கிணைப்பில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கண்காட்சி அமைத்து தமிழின அழிப்பை எடுத்துரைத்தும் , நீதி கோரியும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும், கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச் செயற்பாட்டின் ஊடாக பல்வேறு வேற்றின மக்கள் தமது ஆதரவை ஈழத்தமிழர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கவனயீர்ப்பின் நிறைவில் தமிழ் மக்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றது, இச் சந்திப்பில் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்கள் இப் பயணத்தின் அனுபவத்தையும் , இதன் ஊடாக எமக்கு கிடைக்கும் பலனையும் எடுத்துரைத்தனர். அத்தோடு இச் சந்திப்பில் தாயகத்தில் இருந்து மனிதவுரிமை செயற்பாட்டாளரும் , சட்டத்தரணியும் ஆகிய திரு சுகாஸ் அவர்கள் தாயகத்தில் உள்ள அரசியல் நிலைமையையும் , புலம்பெயர் மக்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக கடமையையும் எடுத்துரைத்தார். நாளைய தினம் 5 வது நாளாக விழிப்புணர்வு ஊர்திப் பயணம் Köln நகரத்துக்கு சென்று அதைத்தொடர்ந்து மாலை Essen நகரத்துக்கு செல்கின்றது குறிப்பிடத்தக்கது.