தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

357 0

தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வடமராட்சி, தென்மராட்சி வல்வெட்டித்துறை ஊரணியிலும், தென்மராட்சி மிருசுவிலிலும், சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கடந்த போர்க்காலத்தில் பொது மக்கள் கூடுதலாக கொல்லப்பட்ட இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறுது.

வடமராட்சி 1985ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட ஊரணி செம்மீன் படிப்பகம் கொண்டு செல்லப்பட்ட கட்டடத்தில் குண்டு வைத்து தகர்த்து இடத்தில் இன்றைய அஞ்சலி இடம்பெற்றது.

தென்மராட்சியில் பொதுமக்கள் கொல்லப்பட்ட  மிருசுவில் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் கெற்றது. இன்றைய நிகழ்வில் வடக்கு மாகாணநபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கொழும்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா நிரோஸ், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.