மேற்கு காசாவின் பிரபலமான சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் தாக்குதல் – 30க்கும் அதிகமானவர்கள் பலி

108 0

மேற்குகாசாவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளுர் மக்கள் அடிக்கடி செல்லும் பிரபல கடற்கரை சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடற்கரையோரத்தில் கூடாரங்களை கொண்ட அல்பக்சா சிற்றூண்டிச்சாலையில் இருந்து மீட்புக்குழுவினர் 20க்கும் அதிகமான உடல்களை மீட்டுள்ளதுடன் காயமடைந்த பலரை மருத்துவமனைகளிற்கு கொண்டு சென்றுள்ளனர் என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

குண்டுதாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாரிய குழிக்குள் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.

நான் இணையத்தை பயன்படுத்துவதற்காக அங்கு சென்றுகொண்டிருந்தேன் நான் சில மீற்றர் தொலைவில் இருந்தவேளை பாரிய சத்தம் கேட்டது என உள்ளுர் ஊடகநிறுவனத்தின் கமரா பணியாளர் தெரிவித்துள்ளார்.

நான் உடனடியாக அங்கு ஓடினேன் எனது சகாக்களும் அங்கு இருந்தனர்- நான் நாளாந்தம் சந்திப்பவர்கள் – அங்கு நான் கண்ட காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக காணப்பட்டன- எங்கும் உடல்கள்இ குருதி . அலறல்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் போர்விமானத்திலிருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.