மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ; கம்பளையில் சம்பவம்!

119 0

கண்டியில் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மல்கடுவ குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்று திங்கட்கிழமை (30) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.